பொதுத் தேர்தலில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் நிலைப்பாடு! வெளியானது அறிக்கை
கட்சி எல்லைகளுக்கு அப்பால் தமிழ் மக்களின் உரிமைகளுக்கு அஞ்சாமல் குரல் எழுப்பக் கூடிய ஆளுமைகளை அடையாளம் கண்டு வாக்களியுங்கள் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
தேர்தலின் முன் நம்மால் எட்ட முடியாமல் போன ஒற்றுமையை தேர்தலின் பின்னர் செயற்படு தளத்தில் எட்டமுடியும் என்று தாம் நம்புவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இது தொடர்பில் மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழ் மக்களின் ஆயுத ரீதியான விடுதலைப் போராட்டம் அமைக்கப்பட்டு 10 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் நாம் மீண்டும் ஒரு பொதுத் தேர்தலை எதிர் கொள்கிறோம்.
இன அழிப்புக்கான பொறுப்புக்கூறலுக்கு ஸ்ரீலங்கா அரசை சர்வதேச ரீதியாக உந்துவதன் மூலம் தமிழ் மக்களுக்கான பரிகார நீதியை பெற்றுக்கொள்ள வேண்டும்.
அதிலிருந்து பிறக்கக்கூடிய ஒரு தீர்வே தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவு செய்யும் என்பதில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எப்போதும் தெளிவாக இருக்கிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையின் பிரதி இணைக்கப்பட்டுள்ளது,