கையடக்கத்தொலைபேசி விற்பனை நிறுவனங்களுக்கு இலட்சக்கணக்கில் அபராதம்

கையடக்கத்தொலைபேசி விற்பனை நிறுவனங்களுக்கு இலட்சக்கணக்கில் அபராதம்

முறையான உரிமம் இன்றி கையடக்கத்தொலைபேசிகளை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் மேனகா பத்திரன தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக கையடக்கத்தொலைபேசிகளை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு இதுவரை பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், திருத்தப்பட்ட தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை சட்டத்தின் மூலம் அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கையடக்கத்தொலைபேசி விற்பனை நிறுவனங்களுக்கு இலட்சக்கணக்கில் அபராதம் | Millions Of Rupees Fined Companies Selling Phones

தொலைபேசி விற்பனை நிலையங்கள் பதிவு செய்யப்படாமையினால் தொலைபேசி விற்பனையை ஒழுங்குபடுத்துவதில் ஆணைக்குழுவுக்கு சிரமம் ஏற்பட்டமையே அபராதத் தொகை அதிகரிக்கப்படுவதற்கான காரணம் என பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

கையடக்கத்தொலைபேசி விற்பனை நிறுவனங்களுக்கு இலட்சக்கணக்கில் அபராதம் | Millions Of Rupees Fined Companies Selling Phones

அதன்படி, இனிமேல் உரிமம் பெறாத கடைகளுக்கு எதிராக கடுமையாக சட்டம் விதிக்கப்படும் என்றும், பதிவு பெறும் நிறுவனங்கள் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கையடக்கத் தொலைபேசிகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்றும் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.