24 மணிநேரத்தில் மூன்றாவது முறையாக அமெரிக்க படைத்தளம் மீது தாக்குதல்
கிழக்கு சிரியாவில்(syria) அமெரிக்கப் படைகள் தங்கியிருக்கும் இராணுவ தளம் கடந்த 24 மணி நேரத்தில் மூன்றாவது முறையாக தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக ஊடகங்கள் இன்று(28)ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தெரிவித்துள்ளன.
பெய்ரூட்டை தளமாகக் கொண்ட அல் மயாதீன் செய்தி நிறுவனத்தின்படி, டெய்ர் அல்-ஜோரில் உள்ள கொனோகோ எரிவாயு வயலில் அமைந்துள்ள தளம் மூன்று முறை ரொக்கெட் தாக்குதலுக்கு இலக்கானதாக தெரிவித்துள்ளது.
பதிலுக்கு அமெரிக்கப் படைகள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளன. அவர்களின் விமானங்கள் மற்றும் உலங்கு வானூர்திகள் தளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மேலே நகர்ந்ததாக அந்த செய்தி நிறுவனம் கூறியது.
ரொக்கெட் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் சமீபத்திய மாதங்களில் இதே போன்ற சம்பவங்கள் அண்டை நாடான ஈராக்கை தளமாகக் கொண்ட எதிர்ப்புக் குழுக்களால் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஈராக்கிய(iraq) எதிர்ப்புக் குழுக்களும் காசா பகுதியில் நடந்து வரும் போரில் இஸ்ரேலிய ஆட்சிக்கு அமெரிக்கா அளித்துவரும் ஆதரவிற்காக கடும் கோபமடைந்துள்ளன.