கடவுச்சீட்டுக்கு காத்திருப்போருக்கான அறிவிப்பு

கடவுச்சீட்டுக்கு காத்திருப்போருக்கான அறிவிப்பு

கடவுச்சீட்டுக்கு முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் மாத்திரமே குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின், தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேசமயம் முன்பதிவு செய்யாமல் செல்வதைத் தவிர்க்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடவுச்சீட்டுக்கு காத்திருப்போருக்கான அறிவிப்பு | Notification For Passport Waiters Sri Lanka

அத்துடன் முன்பதிவு செய்தவர்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில் கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த ஆண்டு முதல் பாதுகாப்பான புதிய இணையவழி மூலம் கடவுச்சீட்டுக்களை வழங்குவதற்கு, நடவடிக்கை எடுத்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.