மருமகனால் தாக்கப்பட்டு மாமனார் கொலை

மருமகனால் தாக்கப்பட்டு மாமனார் கொலை

கொஸ்கம - களுஅக்கல பகுதியில் மருமகனால் தாக்கப்பட்டு மாமனார் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (26) இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் களுஅக்கல பகுதியில் வசிக்கும் 75 வயதுடைய நபரொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

மருமகனால் தாக்கப்பட்டு மாமனார் கொலை | Father In Law Murdered By Son In Law

தனது மகளுக்கும் மருமகனுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டைச் சமரசம் செய்யச் சென்ற போது மருகனால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் அவிசாவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து மருமகன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த கொஸ்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.