நான்கு பிள்ளைகளை தவிக்கவிட்டு உயிரை மாய்த்த தாய்; இலங்கையில் பகீர் சம்பவம்
கேகாலை, வறக்காப்பொல பிரதேசத்தில் கிணற்றில் வீழ்ந்து நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வறக்காப்பொல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று (26) அதிகாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கேகாலை, வறக்காப்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 84 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயொருவரே உயிரிழந்துள்ளார்.
அவரது கணவர் கடந்த 2005 ஆம் ஆண்டு உயிரிழந்துள்ள நிலையில் இவர் தனது இரண்டு பெண் பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த தாயார் நேற்று (26) அதிகாலை ஒரு மணியளவில் தனது மகளிடம் குடிப்பதற்கு தேநீர் கேட்டுள்ளார். அதன் பின்னர், காலை 4 மணியளவில் தனது தாய் வீட்டில் இல்லாததை அவதானித்த மகள் தாயை தேடியுள்ளார்.
இதன்போது, வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றிற்குள் தாய் சடலமாக கிடப்பதை கண்ட மகள் இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து உயிரிழந்தவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக கேகாலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் தொடர்பான மேலதிக விசாரணைகளை வறக்காப்பொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.