யாழில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவருக்கு கொழும்பில் தொற்று இல்லையென முடிவு!
யாழ். போதனா வைத்தியசாலை 7ம் இலக்க விடுதியில் கொரோனா தொற்று உறுதியானதாக கூறப்பட்ட நபருக்கு கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், யாழ் போதனாசாலை 7ம் இலக்க விடுதியில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் அனைவரும் சுயதனிமைப்படுத்தலுக்கு உற்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களை விடுவிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் குறித்த நபருக்கு மீளவும் இரண்டு தடவைகள் PCR பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த இரண்டு தடவைகளும் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.