தங்க விலையில் திடீர் மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல்

தங்க விலையில் திடீர் மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல்

தங்கத்தின் விலை உலக சந்தையில் நாளுக்கு நாள் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

எனினும் இலங்கையில் கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலையானது குறைவடைந்த நிலையில் இன்று (24.07.2024) மீண்டும் உயர்வடைந்துள்ளது. 

முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போதே தங்கத்தின் விலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் (Ounce) தங்கத்தின் விலையானது 734,382 ரூபாவாக காணப்படுகின்றது.

24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 25,910 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) 207,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்க விலையில் திடீர் மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல் | Today Gold Price In Sri Lanka World Gold Marketஅதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 23,760 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 190,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 22,680 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 181,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 195,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்க விலையில் திடீர் மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல் | Today Gold Price In Sri Lanka World Gold Marketஇதேவேளை, அங்கு (22 karat gold 8 grams) ஒன்று 180,400 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறப்பிடத்தக்கது.