ஷானி அபேசேகரவுக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு

ஷானி அபேசேகரவுக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு

கைது செய்யப்பட்டுள்ள குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஷானி அபேசேகரவை எதிர்வரும் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவரை இன்று கம்பஹா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள சிரேஷ் காவல்துறை அத்தியட்சகர் ஷானி அபேசேகர கொழும்பு குற்றவியல் பிரிவினரால் நரஹேன்பிட்டியிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதி காவல்துறை மா அதிபர் வாஸ் குணவர்தன தொடர்பான வழக்கின் துப்பாக்கியை பொறுப்பேற்றமை தொடர்பான சாட்சியை மறைத்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது