தென்னிலங்கையில் சிறுவர்களுக்கு ஆபத்தாக செயற்பட்ட நபர் கைது

தென்னிலங்கையில் சிறுவர்களுக்கு ஆபத்தாக செயற்பட்ட நபர் கைது

களுத்துறையில் கிதுலாவே பபி என அழைக்கப்படும் பிரபல போதைப்பொருள் வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் களுத்துறை நகரிலும் அண்மித்த பாடசாலை மாணவர்களுக்கும் மேலதிக வகுப்பு மாணவர்களுக்கும் மிகவும் நுட்பமான முறையில் போதைப்பொருள் விற்பனை செய்வதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் களுத்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதற்கமைய, 1000 போதை மாத்திரைகளுடன் 23 வயதான கிதுலாவே பபி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதை மாத்திரை 300 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும், களுத்துறை நகரம், தொடங்கொட, நாகொட, ஹென்டியங்கல பிரதேசங்களில் இருந்து சிறுவர்கள் கொள்வனவு செய்ய வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்கு அறிந்தவர்களுக்கு மட்டும் போதை மாத்திரை விற்பனை செய்வதாகவும், நீண்ட காலமாக இந்த நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேக நபர் இன்று களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.