பொதுத் தேர்தலை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை....!

பொதுத் தேர்தலை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை....!

பொதுத் தேர்தலை முன்னிட்டு கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளிலிருந்து தமது சொந்த இடங்களுக்கு செல்பவர்களுக்காக விசேட பொது போக்குவரத்து திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

இதற்கமைய இன்று முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரையில் விசேட பொது போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சகல பேருந்துகளும் போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஊடாக மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து மாத்திரமின்றி மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் கீழுள்ள 600 பேருந்துகளும் சேவையில் ஈடுபடுத்துவதற்கு தயார்படுத்தப்பட்டுள்ளன.

தேவை ஏற்படின் அவற்றையும் சேவையில் ஈடுபடுத்த முடியுமென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதுதவிர தொடருந்து திணைக்களத்தின் சகல தொடருந்துகளும் விசேட பொது போக்குவரத்து திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ளன.

அத்துடன் தொடருந்து பயணங்களை நீட்டிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.