மக்களுக்கான இலவச காணி உறுதிகள்: ரணில் வெளியிட்ட கருத்து

மக்களுக்கான இலவச காணி உறுதிகள்: ரணில் வெளியிட்ட கருத்து

பொருளாதார நெருக்கடியின் போது மக்கள் தமது அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்ததன் காரணமாகவே இன்று மக்களுக்கு இலவச காணி உறுதிகளை வழங்கக்கூடிய சூழல் உருவாகியுள்ளதாக சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

கொழும்பு (Colombo) மாவட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் வீட்டு உரிமையாளர்களுக்கு இலவசப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போது அதிபர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்

கொழும்பு மாவட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் 50,000 வீட்டு உரிமையாளர்களுக்கு இலவசப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று பிற்பகல் சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது

குறித்த நிகழ்வானது, அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்றுள்ளது.

மக்களுக்கான இலவச காணி உறுதிகள்: ரணில் வெளியிட்ட கருத்து | Free Land Assurances For People Sri Lanka

அதன் போது, மேல் மாகாணத்தை சுமார் 50 இலட்சம் மக்கள் வாழும் பெரிய நகரமாக அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.