கல்வித்துறையில் மாற்றம்: வெளியான அறிவிப்பு

கல்வித்துறையில் மாற்றம்: வெளியான அறிவிப்பு

6 வெளிநாட்டு மொழிகள் தெரிந்த 500 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமார் தெரிவித்துள்ளார்.

அதன்படி, ஜெர்மன், பிரெஞ்சு, கொரியன், ஹிந்தி, ஜப்பானிய மொழிகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.கல்வித்துறையில் மாற்றம்: வெளியான அறிவிப்பு | Foreign Language Teachers For Schools

 எதிர்கால சந்ததியினரை வெளிநாட்டு தொழில் சந்தைக்கு தயார்படுத்தும் நோக்கில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, விஞ்ஞான பீடங்களுக்கு வருடாந்தம் ஆட்சேர்ப்பு செய்வோரின் எண்ணிக்கையை 5000 இலிருந்து 7500 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.