மகளின் கோபத்தை குறைக்க பூசாரியிடம் அனுப்பிவைத்த தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி!

மகளின் கோபத்தை குறைக்க பூசாரியிடம் அனுப்பிவைத்த தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி!

 லுணுகலை பிரதேசத்தில் பதினான்கு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் பூசாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.

லுணுகலை ஹொப்டனைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமியே துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

மகளின் கோபத்தை குறைக்க பூசாரியிடம் அனுப்பிவைத்த தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி! | A Shock Awaits The Mother Of The Priest Who Abused

தனது மகளுக்கு அளவுக்கதிகமான கோபம் வருவதாகவும் வீட்டில் உள்ளவர்கள் சொல்வதை பிள்ளை கேட்பதில்லை என்பதால் அது தெய்வ குற்றமாக இருக்கலாம் என எண்ணி பிள்ளைக்கு தாயத்து கட்டுவதற்காக பூசாரி ஒருவரை அணுகியுளள்னர்.

கடந்த மாதம் 3ஆம் திகதி சிறுமியின் வீட்டுக்கு வந்த பூசாரி பிள்ளைக்கு தாயத்து கட்ட வேண்டும் என கூறி அனைவரையும் வெளியே செல்லுமாறு கூறியுள்ளார்.

அதன்பின்னர் பூசாரி தனிமையில் இருந்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து சுகயீனமுற்ற சிறுமியை பதுளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க முற்பட்ட போது சிறுமி கருதரித்திருப்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் நேற்று முன் தினம் ( 11 ) லுணுகலை பொலிஸ் நிலையத்திற்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய 30 வயதுடைய நமுனுகுலை கனவரல்ல பகுதியை சேர்ந்த பூசாரி லுணுகலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமி பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபரை பசறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.