ஒரு வாரத்தில் 1,700 பேர் கொவிட் தொற்றால் உயிரிழப்பு

ஒரு வாரத்தில் 1,700 பேர் கொவிட் தொற்றால் உயிரிழப்பு

உலகில் பெருமளவான மக்களை உயிரிபலி வாங்கிய கொவிட் வைரஸின் தீவிரம் குறைந்துள்ள போதிலும், அது இன்னும் உலகிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜெனீவாவில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு வாரத்தில் 1,700 பேர் கொவிட் தொற்றால் உயிரிழப்பு | 1 700 People Die Of Covid Infection In A Week

தற்போதும் உலகம் முழுவதும் ஒரு வாரத்தில் 1,700 பேர் கொவிட் தொற்றால் உயிரிழப்பதாக அவர் தெரிவித்தார்.

மேலும் பல நாடுகளில் கொவிட் வைரஸுக்கு எதிராக நோய்த்தடுப்பு மருந்துகளைப் பெறுவதில் குறைந்துள்ளதாக தெரிவுத்த அவர் , வைரஸைத் தொடர்ந்து பலவீனப்படுத்தத் தடுப்பூசிகளைப் பெறுவது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.