முல்லைத்தீவில் ஹையர்ஸ் ரக வாகனம் விபத்து : ஒருவர் உயிரிழப்பு

முல்லைத்தீவில் ஹையர்ஸ் ரக வாகனம் விபத்து : ஒருவர் உயிரிழப்பு

முல்லைத்தீவு (Mullaitivu) ஏ-09 வீதியில் திருமுருகண்டிக்கும் கொக்காவில் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று (11.07.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹையர்ஸ் ரக வாகனம் ஒன்று முன்னே சென்று கொண்டிருந்த பாரஊர்தி ஒன்றுடன் மோதி குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

mullaitivu-accident-a-person-death

இந்த விபத்தில் படுகாயமடைந்த நால்வரும் உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Gallery

 

GalleryGallery