திடீரென வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை : வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

திடீரென வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை : வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

எனினும் இலங்கையில் கடந்த சில தினங்களாக உயர்வடைந்த தங்கத்தின் விலையானது இன்று (09) சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது.

முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போதே தங்கத்தின் விலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 721,077 ரூபாவாக காணப்படுகின்றது.

24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 25,440 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 203,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 23,320 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் ( 22 karat gold 8 grams) 186,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.

திடீரென வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை : வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல் | Today Gold Price In Sri Lanka World Gold Market

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 22,260 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 178,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.

எனினும் தங்க நகைகளின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 194,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

திடீரென வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை : வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல் | Today Gold Price In Sri Lanka World Gold Market

இதேவேளை, அங்கு (22 karat gold 8 grams) ஒன்று 179,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.