ஆசிரியரின் சமூகவிரோத செயல்:ஆபாச காணொளிகள் மற்றும் புகைப்படங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை

ஆசிரியரின் சமூகவிரோத செயல்:ஆபாச காணொளிகள் மற்றும் புகைப்படங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை

கொழும்பு பன்னிபிட்டிய பகுதியில் ஆபாச காணொளிகள் மற்றும் புகைப்படங்களை எடுத்து அமெரிக்கா உள்ளிட்ட ஐந்து வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து வந்த சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

54 வயதான குறித்த நபர் ஆங்கில மொழி கற்பிக்கும் ஆசிரியர் எனவும் 2012ஆம் ஆண்டிலிருந்து 8 வயது முதல் 15 வயது வரையிலான ஆண் சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்துள்ளார் எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

ஆசிரியரின் வீட்டிலிருந்து பெருந்தொகையான உள்ளாடைகளும் மீட்கப்பட்டுள்ளதோடு, சிறுவர்களின் ஆபாச காணொளிகள் அடங்கிய 130 காணொளிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.