இலங்கையில் முட்டை விலை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!

இலங்கையில் முட்டை விலை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!

 இலங்கையில் அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் முதல் முட்டைகளுக்கு 15 வீதமான பெறுமதி சேர் வரி (VAT) அறவிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் எச்.எம்.டி.ஆர். அழககோன் குறிப்பிட்டுள்ளார்.இலங்கையில் முட்டை விலை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு! | New Announcement About Egg Prices In Sri Lanka Vat

இதன் காரணமாக அடுத்த ஆண்டு முட்டையின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், நுகர்வோர் அதிகார சபையானது முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயம் செய்துள்ளது.

இருப்பினும், நிர்ணயிக்கப்பட்ட விலையில் முட்டைகளை விற்பனை செய்ய முடியாது என முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.