இன்றைய தினம் மழையுடன் கூடிய காலநிலை
நாட்டின் பல பிரதேசங்களிலும் இன்றைய தினம் மழையுடன் கூடிய காலநிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் மன்னார் முதல் கொழும்புஇ காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படக்கூடும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அந்த கடற்பகுதிகளில் எதிர்வரும் 24 மணத்தியாலங்களுக்கு காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 65 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும்.
எனவே கடற்றொழிலாளர்களும் கடற்படை சமூகமும் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.