இலங்கையில் மே மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜுனில் அதிகரித்த பண வீக்கம்

இலங்கையில் மே மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜுனில் அதிகரித்த பண வீக்கம்

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மதிப்பீட்டின் பிரகாரம் கடந்த மே மாதம் 0.9 சதவீதமாகப் பதிவாகியிருந்த பணவீக்கம், ஜுன் மாதம் 1.7 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.

அதன்படி கடந்த மே மாதம் பூச்சியமாகப் பதிவான உணவுப்பணவீக்கம் ஜுனில் 1.4 சதவீதமாகவும், மே மாதம் 1.3 சதவீதமாகப் பதிவான உணவல்லாப்பணவீக்கம் ஜுனில் 1.8 சதவீதமாகவும் உயர்வடைந்தன.

மேலும் கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெணின் மாதாந்த மாற்றம் ஜுனில் 0.77 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.

இலங்கையில் மே மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜுனில் அதிகரித்த பண வீக்கம் | Change In Inflation Sri Lanka June Compared To May

இதற்கு உணவுப்பொருட்களின் விலைகள் மற்றும் உணவல்லாப்பொருட்கள், சேவைகளின் விலைகள், கட்டணங்களில் அவதானிக்கப்பட்ட அதிகரிப்பு காரணமாக அமைந்துள்ளது.

பொருளாதாரத்தின் அடிப்படைப்பணவீக்கத்தைப் பிரதிபலிக்கின்ற மையப்பணவீக்கம் கடந்த மே மாதத்தில் பதிவான 3.5 சதவீதத்திலிருந்து ஜுன் மாதத்தில் 4.4 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.

 

இது இவ்வாறிருக்க பொருத்தமான கொள்கை வழிமுறைகள் மற்றும் உறுதியான பணவீக்க எதிர்பார்க்கைகள் என்பவற்றின் மூலம் துணையளிக்கப்பட்டு, பணவீக்கமானது எதிர்வரும் காலத்தில் இலக்கிடப்பட்ட மட்டத்தை அடைந்து, நடுத்தர காலத்தில் அம்மட்டத்துக்கு மேல் பதிவாகும் என மத்திய வங்கி எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளது.