
இலங்கையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை....!
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2814 ஆக அதிகரித்துள்ளது.
தேசிய தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள விசேட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 2811 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 03 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் இருவர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பியவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2333 ஆக காணப்படுகின்றது.
அதேபோல், இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 470 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.