குளவி கொட்டுக்கு இலக்காகி 12 பேர் காயம்

குளவி கொட்டுக்கு இலக்காகி 12 பேர் காயம்

நல்லத்தண்ணி-மரே பகுதியில் உள்ள தேயிலை தோட்டம் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த தோட்ட தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்கான 12 பேர் தற்சமயம் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது. இவர்களில் 04 பெண்களும் உள்ளடங்குவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனஇதற்கிடையில்,மஸ்கெலியா தேயிலை தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களும் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.இந்நிலையில், அதனால் பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் மஸ்கொலியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.