
பூமி மீது மோதப்போகும் குறுங்கோள் : நாசா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
எதிர்வரும் 2038-ம் ஆண்டு ஜூலை 12-ம் திகதி நாம் வாழும் பூமி மீது சிறு கோளொன்று மோவுள்ளதாக அமெரி்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
பூமி மீது மோதக் கூடிய குறுங்கோள் பற்றிய ஆய்வை கடந்த ஏப்ரலில் மேற்கொண்ட நாசா நிறுவனம் தனது ஆய்வு முடிவை கடந்த 20ம் திகதி வெளியிட்டது.
அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் லாரெல் நகரில் உள்ள ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் இயற்பியல் ஆய்வகத்தில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு முடிவில், சக்தி வாய்ந்த குறுங்கோள் ஒன்று பூமியை 72 சதவீதம் தாக்க கூடிய சாத்தியக்கூறு உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.
இந்த ஆய்வில், அமெரிக்காவின் பல்வேறு அரசு அமைப்புகள் மற்றும் சர்வதேச குழுவினர் என 100 பிரதிநிதிகள் வரை இணைந்து மேற்கொண்டனர்.
பூமி மீது குறுங்கோள் மோதுவதற்கான வாய்ப்பு 72 சதவீதம் என்ற அளவில் உள்ளது. எனினும், இந்த முதல்கட்ட ஆய்வில் குறுங்கோளின் அளவு, அதில் கலந்துள்ள பொருட்கள் மற்றும் நீண்டகால இயங்கு பாதை உள்ளிட்ட விபரங்களை சரியாக தீர்மானிக்க முடியவில்லை என்று நாசா தெரிவித்து உள்ளது.
இந்த குறுங்கோள் மோதலை தடுக்க போதிய அளவில் நாம் தயாராக இல்லை என்றும் நாசா தெரிவித்து உள்ளது.