மாணவன் மீது கொடூர தாக்குதல் : சக மாணவர்கள் வெறியாட்டம்
பரசங்கசாவ பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயது மாணவனை வாயில் இரத்தம் வரும் வரை தாக்கிய சம்பவத்தில் அதே பாடசாலையைச் சேர்ந்த எட்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பரசங்கசாவ காவல்துறையினர் தெரிவித்தனர்.
மெதகம, அம்பகஸ்வெவ மற்றும் பரசங்கஸ்வெவ பிரதேசங்களில் வசிக்கும் தரம் 10 இல் கல்வி கற்கும் 15 வயதுடைய 8 மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.
சியபலகஸ்வெவ, பரசங்கஸ்வெவ பிரதேசத்தில் வசிக்கும் அதே பாடசாலையில் தரம் 10 இல் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவனே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான மாணவனின் பெற்றோர் காவல்துறையில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகத்திற்குரிய மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த 21 ஆம் திகதி பாடசாலையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக 8 மாணவர்கள் இம்மாணவனை பாடசாலையில் வைத்து தாக்கியதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் காயமடைந்த மாணவன் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.