கொழும்பு - ஹட்டன் பிரதான வீதியில் விபத்து : ஒருவர் காயம்

கொழும்பு - ஹட்டன் பிரதான வீதியில் விபத்து : ஒருவர் காயம்

 ஹட்டன் பிரதான வீதியில் கினிகத்தேன கடவல பகுதியில்  இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்ககுள்ளானதில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தானது இன்று (23) காலை இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து (Colombo) ஹட்டன் (Hatton) நோக்கிச் செள்ற அரச பேருந்துடன் ஹட்டனில் இருந்து கொழும்ப நோக்கி சென்று கொண்டிருந்த லொறியும் சறுக்கி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

accident-colombo-hatton-main-road-person-injuredஇந்நிலையில் காயமடைந்த பெண் கினிகத்தேன பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி பொது வைத்தியசாலையில் மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

மேலும், விபத்து காரணமாக குறித்த பகுதியின் போக்குவரத்து ஒரு வழியாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

Gallery

Gallery