நாட்டில் டெங்கு நோய் தொடர்பில் சுகாதார அமைச்சு எச்சரிக்கை

நாட்டில் டெங்கு நோய் தொடர்பில் சுகாதார அமைச்சு எச்சரிக்கை

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 27,197 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 9 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன.

நாட்டில் டெங்கு நோய் தொடர்பில் சுகாதார அமைச்சு எச்சரிக்கை | Health Ministry Warns About Dengue In The Countryஅதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலிருந்து பதிவாகுவதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நோய் பரவக்கூடிய அபாயம் காணப்படுவதால் பொதுமக்கள் அனைவரும் தங்களது சுற்றுச்சூழலைச் சுத்தமாக வைத்திருக்குமாறு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.