வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த அறிவிப்பு

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த அறிவிப்பு

எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கான வானிலை அறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த அறிவிப்பு | Notification Department Of Meteorology Rain Alert

அதன்படி மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும். மாத்தளை, அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

மெலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் மணிக்கு 40 - 50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.