விசாரணை மேற்கொள்ள மூன்று குழுக்கள்.

விசாரணை மேற்கொள்ள மூன்று குழுக்கள்.

போதை பொருள் மற்றும் போதை பொருள் விற்பனை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மதுவரி அதிகாரிகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.மதுவரி ஆணையாளரினால் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளது கடந்த சில தினங்களுக்கு முன்னர் புத்தளம் - களப்பு அருகாமையில் ஐஸ் ரக போதை பொருள் 200 கிராத்துடன் மதுவரி அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைக்காக வடமேல் மாகாண பிரதிநிதித்துவப்படுத்தும்உதவி ஆணையாளர் இருவரின் கீழ் குழு ஒன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது இதேவேளை பமுனுகம - நுகபே பிரதேசத்தில் போதை பொருள் மற்றும் எத்தநோலுடன் மதுவரி உத்தியோகத்தர் உட்பட இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள பிரதி ஆணையாளரினால் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.ஒரு வார காலப்பகுதியில் குறித்த குழுக்களின் அறிக்கையினை ஆராய்ந்து பார்க்க எதிர்ப்பார்த்துள்ளதாக மதுவரி திணைக்களத்தின் நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இதனிடையே, களுத்துறை - ஹீனடியனகல பிரதேசத்தில் இரு மாடிகள் கொண்ட வீட்டில் போதை பொருள் உற்பத்தியினை முன்னெடுத்து சென்ற சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் 9 பேர் இன்றைய தினம் களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 4 ஆயிரம் லீட்டர் எத்தனோல் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த உற்பத்தியினை முனனெடுத்து சென்ற பிரதான சந்தேக நபர் கடந்த வருடம் டிசம்பம் மாதம் 6 ஆம் திகதி செய்தி சேகரிக்க சென்ற எமது செய்தியாளர் மற்றும் அவரது மனைவியினை தாக்கி அச்சுறுத்தல் விடுத்தமை குறிப்பிடத்தக்கது.