காதலனை சந்தித்து விட்டு வீடு திரும்பிய மாணவிக்கு 5 இளைஞர்களால் நேர்ந்த கொடூரம்!

காதலனை சந்தித்து விட்டு வீடு திரும்பிய மாணவிக்கு 5 இளைஞர்களால் நேர்ந்த கொடூரம்!

கொழும்பில் 17 வயதுடைய பாடசாலை மாணவியை கடத்திச் சென்று வன்கொடுமை செய்ததாக கூறப்படும் 5 இளைஞர்களை கைது செய்ய விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவி தனது காதலனைச் சந்தித்து விட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் அவரை கடத்திச் சென்றுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, ஜல்தர பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் சுடுகாட்டுக்கு அழைத்துச் சென்று வன்கொடுமை செய்தாக மாணவி அளித்த முறைப்பாட்டில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தனது சித்தியிடம் புத்தக கடைக்கு செல்வதாக கூறிவிட்டு காதலனை பார்க்க சென்ற போது இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காதலனை சந்தித்து விட்டு வீடு திரும்பிய மாணவிக்கு 5 இளைஞர்களால் நேர்ந்த கொடூரம்! | 5 Youths Assaulted School Girl See Her Boyfriendஇந்த நிலையில், மாணவியை தவறான முறைக்குட்படுத்தியவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.