30 அடி பள்ளத்தில் வீழ்ந்த முச்சக்கரவண்டி! 4 பேருக்கு நேர்ந்த நிலை
பதுளை - மஹியங்கனை பிரதான வீதியில் முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளானத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விபத்து சம்பவம் இன்றையதினம் (20-06-2024) இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
முச்சக்கர வண்டி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து 30 அடி பள்ளத்தில் வீழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது