கொழும்பில் நபரொருவரை கைது செய்ய சென்ற பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

கொழும்பில் நபரொருவரை கைது செய்ய சென்ற பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

கொழும்பு - வெல்லம்பிட்டி, மீதொட்டமுல்ல, வடுகொடவத்தை பகுதிய்ல் பொலிஸார் நடாத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீதொட்டமுல்ல, வடுகொடவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

கொழும்பில் நபரொருவரை கைது செய்ய சென்ற பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி! | One Injured In Police Firing In Colombo Dog Bitten

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபரை கைதுசெய்ய முயற்சித்த வேளை சந்தேக நபர் வீட்டில் இருந்த நாய்களை ஏவிவிட்டு பொலிஸாரை தாக்கி காயப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து சந்தேக நபரைகட்டுப்படுத்துவதற்காக பொலிஸாரால் குறித்த துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நபரொருவரை கைது செய்ய சென்ற பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி! | One Injured In Police Firing In Colombo Dog Bitten

துப்பாக்கிசூட்டில் சந்தேக நபரின் வலது காலில் காயம் ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று வெல்லம்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.