யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற பாரவூர்தி இன்று அதிகாலை விபத்து : இருவர் படுகாயம்

யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற பாரவூர்தி இன்று அதிகாலை விபத்து : இருவர் படுகாயம்

அநுராதபுரம் மிஹிந்தலவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக மிஹிந்தல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து தம்புள்ளை நோக்கி மரக்கறிகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி இன்று (20) ஏ9 வீதியில் மிஹிந்தலை பலுகஸ்வெவ பகுதியில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசருடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது

இந்த விபத்தில் இருவர் படுகாயமடைந்து அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற பாரவூர்தி இன்று அதிகாலை விபத்து : இருவர் படுகாயம் | A Lorry Accident From Jaffna

விபத்தின் போது பாரவூர்தியில் மூவர் பயணித்ததாகவும், பாரவூர்தியில் பயணித்த உதவியாளரும், பாரவூர்தியில் உரிமையாளரும் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரவூர்தியின் சாரதியின் கவனயீனம் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை காவல்துறை போக்குவரத்து பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற பாரவூர்தி இன்று அதிகாலை விபத்து : இருவர் படுகாயம் | A Lorry Accident From Jaffna