கோர விபத்துக்குள்ளான மாணவர்கள் பயணித்த பேருந்து: வெளியான காரணம்
கடுவெல (Kaduwela), ரணால பகுதியில் தனியார் பேருந்து மற்றும் மாணவர் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானமைக்கு கவனக்குறைவாக பேருந்துகளை செலுத்தியமையே காரணம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று (19.06.2024) கொழும்பில் (colombo) இருந்து லபுகமுவ நோக்கி மாணவர்களை ஏற்றிச் சென்ற மாணவர் பேருந்தும் எம்பிலிப்பிட்டியவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டிருந்தது.
இந்த விபத்தில் காயமடைந்த பாடசாலை மாணவர்கள் உட்பட 50 பேர் நவகமுவ மற்றும் அவிசாவளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹன்வெல்ல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.