உத்தேச வாடகை வருமானச் சட்டம் அதிக வாடகை வருமானம் ஈட்டுவோருக்கு மாத்திரமானது

உத்தேச வாடகை வருமானச் சட்டம் அதிக வாடகை வருமானம் ஈட்டுவோருக்கு மாத்திரமானது

உத்தேச வாடகை வருமானச் சட்டம், அதிக வாடகை வருமானம் ஈட்டுவோருக்கு மாத்திரமானதாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஒவ்வொரு நபரினதும் முதல் சொத்து, இந்த வாடகை வரியிலிருந்து விடுவிக்கப்படும் அதேநேரம், சாதாரண வருமானம் ஈட்டும் மக்களிடத்தில் இந்த வரி அறவிடப்பட மாட்டாது என்றும் ஜனாதிபதி உறுதியளித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 18.06.2024 பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையின்போதே இதனைத் தெரிவித்தார்.

பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பிய ஜனாதிபதி, பாலின சமத்துவச் சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஆராய்வதற்காக பாராளுமன்றத் தெரிவுக் குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தினார்.

உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு, பெண்களின் உரிமைகளுக்கும் பௌத்த மதத்தின் பாதுகாப்புக்கும் சவாலாகவும் பிரச்சினைக்குரியதாகவும் அமையும் என்பதையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.