சர்வதேச சந்தையில் அதிகரித்த இயற்கை எரிவாயுவின் விலை
சர்வதேச சந்தையில் (International Market) இயற்கை எரிவாயுவின் (Natural Gas) விலை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இன்றைய தினம் 2.797 அமெரிக்க டொலராக (US Dollar)அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
இதேவேளை, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின்(Crude oil) விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேசச் சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.37 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 83.61 அமெரிக்க டொலராக நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.