நாட்டில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்கள் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்கள் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக கடந்த ஆண்டில் 29.5 வீதமாக மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்வதாக உலக வங்கியின் அண்மைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்கள் தொடர்பில் வெளியான தகவல் | 29 5 Persent People Under Poverty Level In Lankaமேலும் கல்வி, சுகாதாரம் மற்றும் வாழ்க்கைத்தரம் போன்ற விடயங்களில் நாட்டின் 55.7 வீதமானவர்கள் சவால்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்கள் தொடர்பில் வெளியான தகவல் | 29 5 Persent People Under Poverty Level In Lankaபாடசாலை கல்வி, பாடசாலை வரவு,நோய் நிலைமைகள், சுகாதார வசதி பெற்றுக்கொள்ளக்கூடிய நிலைமை, வீடுகள், குடிநீர், சமையல் எரிபொருள் வசதி உள்ளிட்ட பல்வேறு முக்கிய காரணிகள் உரிய முறையில் கிடைக்கப் பெறாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு வசதி குறைந்தவர்கள அதிகளவில் கிராமிய பகுதிகளில் வாழ்ந்து வருவதாகவும் சுமார் 82 வீதமான கிராமிய மக்கள் இவ்வாறு வறுமையில் வாடுவதாகவும் கூறப்படுகின்றது.