இலங்கை வானிலையில் மிக விரைவில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்!

இலங்கை வானிலையில் மிக விரைவில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்!

இலங்கையின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழை நிலைமை 19ஆம் திகதியில் இருந்து அடுத்த சில நாட்களில் சற்று அதிகரிக்கக் கூடிய வாய்ப்பு காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேலும் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல முறை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை வானிலையில் மிக விரைவில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்! | Rains May Increase In Sri Lanka Next Few Daysமத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.