பொசன் போயாவை முன்னிட்டு இலவச தொடருந்து சேவை

பொசன் போயாவை முன்னிட்டு இலவச தொடருந்து சேவை

பொசன் போயாவை முன்னிட்டு மிஹிந்தலைக்கு (Mihintale) வரும் பக்தர்களுக்காக எவ்வித கட்டணமும் அறவிடப்படாமல் தொடருந்து சேவையை ஆரம்பிக்க தொடருந்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கையானது இன்று (17) முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அந்த சிறப்பு தொடருந்துகள் அனுராதபுரம் (Anuradhapura) - மிஹிந்தலை இடையே சேவையில் ஈடுபட திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பில் (Colombo) இருந்து மஹவ (Maho) நோக்கி தொடருந்தில் வரும் பயணிகளுக்காக மஹவ தொடருந்து நிலையத்தில் இருந்து அனுராதபுரம் வரை விசேட பேருந்து சேவையை நடாத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பில் இருந்து மஹவ நோக்கி தொடருந்தில் வரும் பயணிகளுக்காக மஹவ தொடருந்து நிலையத்தில் இருந்து அனுராதபுரம் வரை விசேட பேருந்து சேவையை நடாத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொசன் போயாவை முன்னிட்டு இலவச தொடருந்து சேவை | Special Train Service Mihintaleவடக்கு தொடருந்தின் மஹவ மற்றும் அநுராதபுர தொடருந்து நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் புனரமைப்புப் பணிகள் நிறைவடையாததால், இவ்வருடம் பொசன் போயாவுக்கு தொடருந்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே பக்தர்களின் வசதிக்காக மஹவ மற்றும் அனுராதபுரத்திற்கு இடையில் 400 மேலதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலைக்கு இடையிலான தொடருந்து பாதை புனரமைக்கப்பட்டதன் பின்னர், போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) தலைமையில் அநுராதபுரம் தொடருந்து நிலையத்தில் இன்று (17) காலை முதல் தொடருந்து ஓட்டம் திறந்து வைக்கப்பட்டது.

நாளை (18) முதல் தேசிய பொசன் வாரம் ஆரம்பமாகவுள்ளதுடன் அதற்காக அட்டமஸ்தானத்தை மையமாக கொண்டு பல பூசைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பொசன் போயாவை முன்னிட்டு இலவச தொடருந்து சேவை | Special Train Service Mihintaleஇந்த ஆண்டு பொசன் பௌர்ணமி தினம் வரும் 21ம் தேதி வருகிறது.

அதன்படி நாளை முதல் எதிர்வரும் 24ஆம் திகதி வரை பொசன் வாரத்தை பிரகடனப்படுத்த புத்த சாசன அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.