புனித ஹஜ்ஜுப் பெருநாள் இன்று
ஈதுல் - அழ்ஹா´ ஹஜ்ஜுப் பெருநாளை இன்று (17) திங்கட்கிழமை முஸ்லிம்கள் மக்கள் கொண்டாடுகின்றனர்.
இதன் அடிப்படையில் நாட்டிலுள்ள சக மஸ்ஜிதுகளிலும் திறந்தவெளி அரங்குகளிலும் இன்று காலை பெருநாள் தொழுகை நடைபெறுகின்றது.
இறைவனின் தூதரான இப்றாகீம், நபியின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான துல் ஹஜ் மாதம் 10 ஆம் நாள் இது கொண்டாடப்படுகின்றது.
தியாகம், அர்ப்பணிப்பு, கொடை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட ஹஜ் பெருநாளை தியாகத் திருநாள் என்றும் அழைக்கப்படுவது உண்டு.
தம்மிடமுள்ள, தமக்குப் பிடித்தமான அனைத்தையும் படைத்த இறைவனின் நற்கருணையை மட்டும் எதிர்பார்த்து, ஏழை, எளிய மக்களுடன் பகிர்ந்து கொள்ளும் தியாக மனப்பான்மையை ஊக்குவித்து, அதனைக் கொண்டாடும் வகையில் ஹஜ் பெருநாள் முஸ்லிம்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது.
ஹஜ் பெருநாளின் போது முஸ்லிம்கள் அளிக்கும் குர்பானி நன்கொடையும் ஏழை மக்களின் மகிழ்ச்சியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கொடைகளில் ஒன்றாகும்.
முஸ்லிம்களின் ஐந்தாம் கடமையான ஹஜ் கடமையுடன் இணைந்ததாக கொண்டாடப்படும் ஹஜ் பெருநாள், ஹஜ் கடமையின் இறுதி நாளாகவும் அமைந்துள்ளது.
இந்நிலையில் முஸ்லிம்கள் பிராத்தனைகளிலும், தொழுகையிலும் ஈடுப்பட்டு ஹஜ் பெருநாளை கொண்டாடிக் வருகின்றனர்.