நாட்டின் சில பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

நாட்டின் சில பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

வட மத்திய மாகாணத்தில் உள்ள 12 பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பொசன் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 19 ஆம் திகதி பிற்பகல் முதல் 23 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

பண்டிகைக் காலத்தில் கடமையில் ஈடுபடும் காவல்துறையினருக்கான தங்குமிட வசதிகளை வழங்குவதற்காக இந்த பாடசாலைகள் பயன்படுத்தப்படவுள்ளதால், இவ்வாறு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த 12 பாடசாலைகளுக்கு 19 ஆம் திகதி பாடசாலை நிறைவடையும் நேரத்தின் பின்னர் விடுமுறை விட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அனுராதபுரம் மத்திய மகா வித்தியாலயம், ஸ்வர்ணபாலி மகளிர் மகா வித்தியாலயம், விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலயம், வலசிங்ஹ ஹரிஸ்சந்த்ர வித்தியாலயம், மகாபோதி வித்தியாலயம், சாஹிரா முஸ்லிம் மகா வித்தியாலயம், தேவநம்பிய திஸ்ஸ வித்தியாலயம்.

மற்றும்,நிவந்தகச்சேத்திய மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கும், மிஹிந்தலை வலயத்தின் மிஹிந்தலை மகா வித்தியாலயம், கம்மலக்குளம வித்தியாலயம், பத்திராஜ தென்னகோன் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கும், தந்திரிமலை வலயத்தின் விமலஞான வித்தியாலயத்திற்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது.