சந்தையில் எரிவாயு விலையில் ஏற்பட்ட மாற்றம்

சந்தையில் எரிவாயு விலையில் ஏற்பட்ட மாற்றம்

சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை நேற்று 2.88 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

இதேவேளை, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

இதற்கமைய டபிள்யு.ரி.ஐ ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78.45 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82.62 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

இந்நிலையில், டொலரில் மாத்திரம் மசகு எண்ணெய்யை விற்பனை செய்து வந்த சவுதி அரேபிய (Saudi Arabia) மற்றும்  அமெரிக்கா (America) உடனான ஒப்பந்தம் காலாவதியாகி உள்ளது.

இதனால் சவுதி அரேபிய அரசு இனி யூரோ (euro), யுவான், யென், பிட்காயின் போன்றவற்றில் மசகு எண்ணெய்யை விற்பது குறித்து பரிசீலித்துவருகிறது.

மேலும், 50 ஆண்டுகளுக்கு டொலரில் மட்டுமே மசகு எண்ணெய்யை விற்க வேண்டும் என 1974-ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தம் கடந்த வாரம் காலாவதியானது குறிப்பிடத்தக்கது.