தென்னிலங்கை வீடொன்றுக்குள் நடந்த மர்மம் - விசாரணையில் திடுக்கிடும் தகவல்

தென்னிலங்கை வீடொன்றுக்குள் நடந்த மர்மம் - விசாரணையில் திடுக்கிடும் தகவல்

மொரகஹஹேன மொரட்டாவாவத்தையில் இரண்டு மாடி வீடொன்றில் தொன்மைப் பொருட்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் தோண்டிய வர்த்தகர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, அந்தப் பிரிவினரும் மொரகஹஹேன பொலிஸாரும் இணைந்து சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

சந்தேக நபர்களுடன், தண்ணீர் மோட்டர், 2 கல் நொறுக்கும் இயந்திரங்கள், மண்வெட்டிகள், கம்பி மற்றும் பலி கொடுப்பதற்கு பயன்படுத்தும் பொருட்கள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றினர்.

53 வயதான தொழிலதிபர், தனது வீட்டின் குளியலறையின் கழிவு நீரை வெளியேற்றுவதற்காக மேலதிக குழி ஒன்றை வெட்டுவதற்கு உகந்த நேரம் பார்ப்பதற்காக களுத்துறையில் உள்ள பிரபல சோதிடரை சந்தித்துள்ளனர்.

தென்னிலங்கை வீடொன்றுக்குள் நடந்த மர்மம் - விசாரணையில் திடுக்கிடும் தகவல் | Mysterious House Roundup By Policeஅதனை சோதித்த சோதிடர் குளியலறைக்கு அருகில் உள்ள அறையின் கீழ் பகுதியில் பல தசாப்தங்கள் பழைமையான இரத்தினக் கற்கள் இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு கூறியதாக தொழிலதிபரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. 

அதற்கு சில சோதிட செயற்பாடுகள் உள்ளதெனவும் அதனை செய்த பிறகு தோண்டுமாறு சோதிடர் கூறியுள்ளார்.

அதற்காக சில எண்ணெய் போத்தல் போன்றவற்றையும் 3000 ரூபாய் பணமும் வழங்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொழிலதிபர் அவர்களை வீட்டிற்கு அழைத்து வந்து, குளியலறையின் பக்கத்து அறையின் நான்கு மூலைகளிலும் வெற்றிலையில் சில நாணயங்களை வைத்து, அதில் சோதிடர் கொடுத்த சில பானைகள் மற்றும் எண்ணெய் போத்தல்களை  இரவும் பகலும் மேலும் இரண்டு பேரும் தோண்டியதாக கூறப்படுகின்றது.

தென்னிலங்கை வீடொன்றுக்குள் நடந்த மர்மம் - விசாரணையில் திடுக்கிடும் தகவல் | Mysterious House Roundup By Policeநேற்றிரவு பொலிஸார் குறித்த இரண்டு மாடி வீட்டை சுற்றிவளைத்த போது சந்தேகநபர்கள் மூவரும் அந்த இடத்தில் தோண்டிய நிலையில் கைது செய்துள்ளனர்.

இரண்டு மாடி வீட்டில் ஒரு குழந்தை உட்பட ஐந்து பேர் சில மாதங்களாக வசிப்பதாகவும், பாதுகாப்பற்ற முறையில் எவ்வித பாதுகாப்பு முறைகளையும் பயன்படுத்தாமல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்ந்து தோண்டியிருந்தால் இன்னும் சில நாட்களில் வீடு இடிந்து விழுந்து உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தென்னிலங்கை வீடொன்றுக்குள் நடந்த மர்மம் - விசாரணையில் திடுக்கிடும் தகவல் | Mysterious House Roundup By Policeசந்தேகநபர்கள் 27 மற்றும் 53 வயதுடைய ஹொரணை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாகும். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொல்பொருட்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஹொரணை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.