சீனாவில் நீர்வீழ்சியை கூட செயற்கையாக்க முடியுமா?
சீனாவில் காலநிலை மாற்றத்தின்போது நீர் வீழ்ச்சி வரண்டுவிடாமல் பாதுகாப்பதற்காக இந்த செயற்கை நீர்பாச்சல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் உள்ள யுனாடாய் நீர்வீழ்ச்சி மிகவும் பிரபலமானதாகும். இந்த நீர்வீழ்ச்சி தற்போது ஒரு குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளது. இந்த குற்றச்சாட்டின்படி இயற்கை எழில் கொஞ்சும், கண்ணை கவரும் அந்த அருவி செயற்கையானது என்றும், குழாய்கள் அமைத்து அருவியில் நீர் பாய்ச்சப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.
இந்த உண்மையை டிக் டாக்கர் ஒருவர் வெளியிட்ட ட்ரோன் காட்சிகள் மூலம் இந்த உண்மை அம்பலமாகியுள்ளது. இந்த வீடியோ வெளியாகி வைரலான நிலையில், அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
இது குறித்து பேசிய அதிகாரிகள், நீர்வீழ்ச்சியில் குழாய்கள் அமைத்து தண்ணீர் பாய்ச்சப்படுவதை ஒப்புக்கொண்டுள்ளனர். இதற்கான காரணம் கோடைக்காலத்தில் வறட்சியாக இருக்கும் சூழலில் நீர்வீழ்ச்சி வரண்டுவிடாமல் பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துவிடாமல் இருக்கவும் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது என கூறியுள்ளனர்.