பதின்ம வயது மகளை தகாதமுறையில் படம் பிடித்த தாய்; தமிழர் பகுதியில் சம்பவம்

பதின்ம வயது மகளை தகாதமுறையில் படம் பிடித்த தாய்; தமிழர் பகுதியில் சம்பவம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தனது பதின்ம வயது மகளின் மார்பினை கையடக்க தொலைபேசியில் ஒளிப்படம் எடுத்த குற்றச்சாட்டில் இளம் தாயார் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.

இந்த சம்பவம் நேற்று முன் தினம் இடம்பெற்றதாக ட்கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பதின்ம வயது மகளை தகாதமுறையில் படம் பிடித்த தாய்; தமிழர் பகுதியில் சம்பவம் | Mother Inappropriately Filmed Her Teenage Daughterபுதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் 32 வயதான இரு பிள்ளைகளின் தயாரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கணவனை பிரிந்த நிலையில் வாழ்ந்து வரும் குறித்த பெண் தனது 13 வயது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த வேளை சிறுமியின் மார்பக பகுதியினை தனது கைபேசியில் ஒளிப்படம் எடுத்துள்ளார். இதனை தங்கையான 10 வயது சிறுமி கண்டு தனது சித்திக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து தாயார் கைது செய்யப்பட்டுள்ளார்.

மக்களை ஏன் தாயார் அவ்வாறு படமெடுத்தார் என்பது தெரியவராத் நிலையில், சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலிசார் ஈடுபட்டு வருகின்றார்கள்.

அதேவேளை தமிழர் பகுதிகளில் சிறுவர் துஸ்பிரயோகம் மற்றும் போதைவஸ்து பாவனை என்பது அதிகரித்து வருகின்றமை சிறுவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.