விமான விபத்தில் மலாவி நாட்டின் துணை ஜனாதிபதி மற்றும் மனைவி உயிரிழ்ப்பு!

விமான விபத்தில் மலாவி நாட்டின் துணை ஜனாதிபதி மற்றும் மனைவி உயிரிழ்ப்பு!

மலாவி நாட்டின் துணை ஜனாதிபதி சவுலோஸ் சிலிமா மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 9 பேர் பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன்போது, துணை ஜனாதிபதி உள்ளிட்ட அனைவரும் உயிரிழந்ததாக மலாவி ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.

விமான விபத்தில் மலாவி நாட்டின் துணை ஜனாதிபதி மற்றும் மனைவி உயிரிழ்ப்பு! | Vice President Of Malawi Died In A Plane Crash

இந்த விபத்து சம்பவம் நேற்றையதினம் (10-06-2024) காலை இடம்பெற்றது.

தலைநகர் லிலோங்வேயில் இருந்து புறப்பட்ட இராணுவ விமானமே, மலாவியின் சிக்கங்காவா மலைத்தொடரில் பயணித்துக்கொண்டிருந்த போது விபத்திற்குள்ளானது.

விபத்தினையடுத்து சிக்கங்காவா மலைப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் முயற்சிக்கு பிறகு துணை ஜனாதிபதி உள்ளிட்ட அனைவரும் உயிரிழந்ததாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

விமான விபத்தில் மலாவி நாட்டின் துணை ஜனாதிபதி மற்றும் மனைவி உயிரிழ்ப்பு! | Vice President Of Malawi Died In A Plane Crashவிமான விபத்தில் உயிரிழந்த மலாவியின் துணை ஜனாதிபதியின் குடும்ப உறுப்பினர்களுக்கும் மற்றவர்களுக்கும் இரங்கல் தெரிவித்துள்ள மலாவி ஜனாதிபதி,

இறுதிச் சடங்கு வரை துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் தேசியக் கொடியை அரசு அலுவலகங்களில் அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறும் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.