இலங்கையில் எதிர்வரும் 26ஆம் திகதி பாடசாலைகள் முடக்கப்படுமா..

இலங்கையில் எதிர்வரும் 26ஆம் திகதி பாடசாலைகள் முடக்கப்படுமா..

இலங்கை முழுவதும் பாரிய வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக  இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவிக்கின்றது.

எதிர்வரும் 26ம் திகதி சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கின்றார்.இலங்கையில் எதிர்வரும் 26ஆம் திகதி பாடசாலைகள் முடக்கப்படுமா? | Will Schools Be Closed In Sri Lanka On The 26Th

சம்பள முரண்பாடு பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத் தருமாறு வலியுறுத்தி இந்த பணிப் பகிஷ்கரிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இதேவேளை, கொழும்பில் எதிர்வரும் 26ம் திகதி மாபெரும் போராட்டம் ஒன்றை நடாத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.

எதிர்வரும் 12ம் திகதியும் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்க திர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கின்றார்.