மசாஜ் நிலையத்தில் தவறான முறைக்குட்படுத்தப்பட்ட ஈரானிய யுவதி: சந்தேகநபர் உடனடி கைது
22 வயதான ஈரானிய இளம்பெண் ஒருவரை தவறான முறைக்குட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது, கேகாலை (Kegalle), ரம்புக்கன வீதியிலுள்ள ஆயுர்வேத மசாஜ் நிலையமொன்றில் இடம்பெற்றுள்ளது.
தவறான முறைக்குட்படுத்தப்பட்ட ஈரானிய பெண் ஆயுர்வேத மசாஜ் செய்வதற்காக ரந்தெனியவில் உள்ள ஆயுர்வேத மசாஜ் மையத்திற்கு பல ஈரானியர்களுடன் சென்றுள்ளார்.
அதன்போது, பெண்ணை மசாஜ் அறைக்குள் வரவழைத்த சந்தேகநபர் மசாஜ் செய்வதாக கூறி பெண்ணை தவறான முறைக்குட்படுத்தியுள்ளதாக கேகாலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், கேகாலை ரன்தெனிய மாவட்டத்தைச் சேர்ந்த 41 வயதுடையவர் சந்தேகநபர் ஒருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்படுள்ளார்.
அத்துடன், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கேகாலை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.