வெளிநாடுகளில் 10 ஆயிரம் இலங்கையர்களுக்கு நேர்ந்துள்ள நிலை...!
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் சுமார் 10 ஆயிரம் இலங்கையர்கள் தொழில் வாய்ப்பினை இழந்துள்ளனர் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப்பேச்சாளர் மங்கள ரந்தெனிய இதனை தெரிவித்தார்.இவ்வாறு தொழில்வாய்ப்பினை இழந்து நிர்கதி நிலையினை அடைந்துள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வர தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார் மேலும் தற்போது வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இலங்கைக்கு திரும்ப கோரிக்கை விடுத்துள்ளனர் என அந்த பணியகம் தெரிவித்துள்ளது இதேவேளை ஜோர்தான் நாட்டில் தொழில்வாய்ப்பினை இழந்த இலங்கையர்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தியதன் காரணமாக அவர்கள் மீது அந்நாட்டு பாதுகாப்பு பிரிவு கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.ஜோர்தானிலுள்ள குறித்த இலங்கையர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்ப்புகை பிரயோகமானது இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கட்டளைக்கு அமையவோ அல்லது அந்நாட்டிலுள்ள இலங்கை தூதரகத்தின் கட்டளைக்கு அமையவோ மேற்கொள்ளப்படவில்லை என ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.