முதல் முறையாக பறவைக் காய்ச்சலால் உயிரிழந்த நபர்! அதிர்ச்சி தகவல்
மெக்சிகோவில் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபரொருவர் உயிரிழந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மெக்சிகோவில் வசிக்கும் 59 வயதான நபரொருவர் காய்ச்சல், மூச்சுத் திணறல், வயிற்றுப்போக்கு, குமட்டல் மற்றும் பொது அசௌகரியம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் ஏப்ரல் 24 திகதி உயிரிழந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மெக்சிகோவில் பறவைக் காய்ச்சலுக்கு ஒருவர் உயிரிழப்பு இதுவே முதல் முறையான தெரிவிக்கப்பட்டுள்ளது.
பறவைக் காய்ச்சல் பரவல் முதலில் மார்ச் மாதத்தில் Michoacan மாகாணத்தில் கோழிகளைப் பாதித்தன.
தொடர்ந்து மெக்ஸிகோவின் ஏனைய மாநிலங்களிலும் பறவைக் காய்ச்சல் பரவல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.